*02.தினம் 25 வினாக்கள்_TNPSC 08-11-2022*
*02.தினம் 25 வினாக்கள்_TNPSC*
26.நாட்டின் மிகப் பழமையான உயர் நீதிமன்றம் - கல்கத்தா நீதிமன்றம்(1862).
நாட்டின் மிகப் பெரிய உயர் நீதிமன்றம் - அலகாபாத் நீதிமன்றம்.
27. 1976 42 வது சட்ட திருத்தம் சிறு அரசியலமைப்பு ஆகும்.
ஒருமைப்பாடு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
28.1986 நவம்பர் 01 இல் சட்ட மேலவை நீக்கப்பட்டது.
1920 இல் நீதிக்கட்சி வெற்றி பெற்றது.
29.நாடாளுமன்றம் பெயர்கள்
ஜப்பான் - டயட்
தென் ஆப்ரிக்கா -நாடாளுமன்றம்
நார்வே - ஸ்டார்டிங்
அமெரிக்கா - காங்கிரஸ்
30.இந்திய அரசியலமைப்பு வரைவு குழு தலைவர் - டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்.
*நவீன மனு -டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்*.
மூன்று வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
31. திருக்குறளில் இரு முறை வரும் அதிகாரம் - குறிப்பறிதல்.
திருக்குறள் 108 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
32. அணு சக்தி ஆணையம் 1948 இல் அமைக்கப்பட்டது.
33.முதல் மொழிவாரி மாநிலம் ஆந்திரா 1953இல் அமைக்கப்பட்டது.
34.
1905 வங்கபிரிவினை.
1909 மிண்டோ மார்லி சீர்திருத்தம்.
1919 மாண்டெகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம்.
1914 to 1918 முதல் உலகப்போர்.
1928 நேரு அறிக்கை.
1939 to 1945 இரண்டாம் உலகப்போர்.
1945 ஐ நா தோற்றம்.
35.குப்த மரபை தோற்றுவித்தவர் ஶ்ரிகுப்தர்.
குப்த பேரரசு தோற்றுவித்தவர் முதலாம் சந்திர குப்தர்.
வெள்ளி நாணயங்களை முதன்முதலில் வெளியிட்டவர் இரண்டாம் சந்திரகுப்தர்.
36.சீனப் பயணி பாஹியான் இரண்டாம் சந்திரகுப்தர் அவைக்கு வந்தார்.
கவிராஜா , இந்திய நெப்போலியன் - சமுத்திர குப்தர்.
சாஹரி , விக்கிர மாதித்தியான் - இரண்டாம் சந்திரகுப்தர் .
37.அறுவை சிகிச்சை பற்றி விளக்கியவர் சுஸ்ருதர்.
அலகாபாத் தூண் கல்வெட்டு - சமுத்திர குப்தர். (ஹரிசேனர் 33 வரிகள் சம்ஸ்கிருதம்) .
38.ஹரப்பா என்ற சிந்தி மொழி சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்று பெயர்.
39.சிந்து வெளி மக்கள் குதிரை மற்றும் இரும்பின் பயனை அறியவில்லை.
சிந்து வெளி மக்களின் முன்னோடி மெஹர்கர்.
40.1861 இல் தொல்லியல் துறையை நிறுவியவர் அலெக்ஸாண்டர் கண்ணிங்காம்.
41.தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்.
42.பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன். *பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம்* .
43.சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை.
44."பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் இரவலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே"
- கம்பராமாயணம்
45."விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மென்மேலும் முகமலரும் மேலோர் போல"
- கலிங்கத்துப்பரணி
46.“அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்”
என்று நற்றிணை .
47.17.தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் - மேட்டுப்பாளையம்.
48.2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் ஜாதவ் பயேங்கிற்கு *இந்திய வனமகன்* பட்டத்தை வழங்கியுள்ளது.
49.2015 ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஶ்ரீ விருதை வழங்கியுள்ளது.
50. கவுகாத்தி பல்கலைகழகம் ஜாதவ் பயேங்கிற்கு *மதிப்புறு முனைவர்* பட்டம் வழங்கியுள்ளது.
Comments
Post a Comment