தென் இந்திய வரலாறு - காஞ்சிபுரம்

தென் இந்திய வரலாறு - காஞ்சிபுரம்.
*நினைவில் கொள்ள வேண்டியவை*
நந்திவர்மன் பாணி - காஞ்சிபுரம் வைகுண்ட நாதர் கோயில் .
காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டியவர் - *இரண்டாம் நரிம்மவர்மன்* .
காஞ்சி கைலாச நாதர் கோயில் விருப்பாஷா கோவில் போல கட்டப்பட்டுள்ளது.

ஏரிகளின் மாவட்டம் - காஞ்சிபுரம்.
தொண்டை நாட்டில் உள்ளர் மிகப் பழமையான நகரம் காஞ்சியாகும்.

காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள் - முதலாம் விக்கிர மாதித்தன் , இரண்டாம் விக்கிர மாதித்தன் .

காஞ்சிபுரம் தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.காஞ்சிபுரம் புகழ் பெற்ற பவுத்த மையமாகும்.


காஞ்சிபுரம் அறிந்திருந்த வணிகர்கள் - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.

கல்வி நகரம் - காஞ்சி.

நகரங்களில் சிறந்தது காஞ்சி - "சாகுந்தலம்" எழுதிய காளிதாசர்.

கல்வி கரையில்லாத காஞ்சி - திருநாவுக்கரசர்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான்ஸ்வாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்தார்.

காஞ்சி புத்தகயா, சாஞ்சி உள்ளிட்ட ஏழு புனித தலங்களுள் ஒன்று - யுவான்ஸ்வாங்.


தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் - காஞ்சி.

பவுத்த துறவியான மணிமேகலை தனது இறுதி காலத்தை *காஞ்சி* யில் கழித்தார்.

தர்ம பாலர், ஜோதி பாலர், சுமதி , போதிதர்மர் *காஞ்சி* நகரத்தில் பிறந்தவர்கள்.

*தொண்டை நாடு (சான்றோருடைத்து)* - காஞ்சிபுரம் , திருவள்ளூர் , தர்மபுரி , திருவண்ணாமலை , வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி.

*சேர நாடு (வேழமுடைத்து)* - கோவை , நீலகிரி, கரூர் , கன்னியாகுமரி , மற்றும் கேரளம்.

*சோழ நாடு (சோறுடைத்து)* தஞ்சை , திருவாரூர் , நாகை , திருச்சி , புதுக்கோட்டை மாவட்டம்.

*பாண்டிய நாடு (முத்துடைத்து)* - மதுரை , இராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்.

பாண்டியர்களின் கல்வெட்டுகளில் மதுரை மடிரை என்றுள்ளது.

தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையை கூடல் என்கிறது.

கூடல் பாண்டியரின் தலைநகரமாக குறிப்பிடும் நூல்கள் :- பத்துப்பாட்டு , பட்டினப்பாலை , மதுரைக்காஞ்சி.

பொ. ஆ. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வருகை தந்த யுவான் சுவாங் அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்துபியை பார்த்ததாக குறிப்பிடுகிறார்.

*SasidharanAnnamalaiInstitute*
Contact :9894749445

*Telegram:*
https://t.me/SasidharanAnnamalaiInstitute

*WhatsApp:*
https://chat.whatsapp.com/DJopKnSiHctGNRC4090aqn

*Google Map:*
https://maps.app.goo.gl/LXqqQH2G2BEzGoFf8

Dear all,
    Whenever you have time please visit
*Youtube channel*
https://youtu.be/QK3emYrKg8s


Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense