Tnpsc குறிப்புகள்
Tnpsc குறிப்புகள்
1.கடல் வழியாக குதிரை
2.தரை வழியாக மிளகு
3.வடமலை - தங்கம்
4. மேற்கு தொடர்ச்சி மலை - சந்தனம்
5.தென்கடல் - முத்து இறக்குமதி
6. கிழக்கு பகுதியிலிருந்து பவளம்
7. ஈழத்தில் இருந்து உணவுப் பொருட்கள்.
8.கடைச்சங்க தமிழ் பணி செய்தவர்கள் 49பேர்.
9.பாண்டியரின் துறைமுகமான கொற்கை அருகில் உள்ள உவரி என்னுமிடத்தில் இருந்து பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துகளை
இறக்குமதி செய்தார்.
10. சேர நாடு ( வேழமுடைத்து) - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி , மற்றும் கேரளா.
11. சோழ நாடு (சோறுடைத்து ) - தஞ்சை , திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம்.
12. பாண்டிய நாடு (முத்துடைத்து) - மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் .
13.தொண்டைநாடு ( சான்றோருடைத்து) -
காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி.
14. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968.
செம்மொழி மாநாடு 2010.
15. கலியாண சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கல்யாண்ஜி இயற்றிய நூல்கள் -
16.பாலை பாடிய பெருங்கடுக்கோ மற்றும் இளங்கோவடிகள் சேர மரபைச் சேர்ந்தவர்கள்.
17.தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் - மேட்டுப்பாளையம்.
18.2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் ஜாதவ் பயேங்கிற்கு இந்திய வனமகன் பட்டத்தை வழங்கியுள்ளது.
19.2015 ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஶ்ரீ விருதை வழங்கியுள்ளது.
20. கவுகாத்தி பல்கலைகழகம் ஜாதவ் பயேங்கிற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
21.1939 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஆறாம் நாள் முத்து இராமலிங்க தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
(06/09/1939)
22.முத்து இராமலிங்க தேவர் மொத்தம் 20075 நாட்களில் 4000 நாட்கள் சிறையில் கழித்தார்.
வாழ்நாளில் 5 இல் ஒரு பங்குத் சிறையில் கழித்தார்.
23. மௌரிய பேரரசின் மாபெரும் தலை நகரான பாடலிபுத்திரம்(மூன்றாவது பெளத்த மாநாடு) நகரில் 64நுழைவு வாயில்கள் 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.
24. வில் டுறான்ட் பொ. ஆ. மு. ஆறாம் நூற்றாண்டை "நட்சத்திரங்களின் மழை" என்கிறார்.
25. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மகமது கவானின் மதராசா கல்வி நிலையம் 3000 கையெழுத்து பிரதிகளை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டிருந்தது.
26.அறிவியல் புனை கதைகளின் தலைமகன் ஜூல்ஸ் வெர்ன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
27.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் காஞ்சிபுறத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா ஊரில் பிறந்தவர்.
28.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி பாடிய பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
29.599 கலித்தாழிசைகள் கொண்ட கலிங்கத்துப்பரணியை கவிராட்சசன் ஒட்டகூத்தர் தென்தமிழ் தெய்வபரணி என்று புகழ்ந்துள்ளார்.
30. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ஆன திருமூலரின் திருமந்திரம்-தமிழ் மூவாயிரம் எனவும் அழைக்கப்படுகிறது.
31.குணங்குடி மஸ்தான் சாகிபு என்ற இயற்பெயர் கொண்ட சுல்தான் அப்துல் காதர் சதுரகிரி , புறாமலை , நாகமலை பகுதிகளில் தவம் புரிந்தார்.
32.காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் போகர் எழுநூறு , அகத்தியர் சுருக்கம் , சிமிட்டு இரத்தின சுருக்கம் , பால வாகடம் நூல்களை பதிப்பித்து உள்ளார்.
33. சே. சேசுராசா என்ற இயற்பெயர் கொண்ட இறையரசன் *ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிபாவை என்னும் நூலை எழுதி உள்ளார்.
34. இரண்டு வழியாக நீரை பயன்படுத்துகிறோம். ஒன்று உண்ணும் உணவின் வழியாக , இரண்டு உணவு பொருட்களின் உற்பத்தி வழியாக
1 கிலோ ஆப்பிள் - 822 லிட்டர்
1 கிலோ சர்க்கரை - 1780 லிட்டர்
1 கிலோ அரிசி - 2500 லிட்டர்
1 கிலோ காப்பி கொட்டை - 18,900 லிட்டர்.
35.தமிழகத்தின் 36 வகையான முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
கொடை முரசு , படை முரசு , மண முரசு
மாக்கண் முரசம் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.
36.நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடி கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்கள் பசார் பெயின்டிங் என்று அழைக்கப்படுகிறது.
37. 1981 இல் எம். ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைபுலம் , சுவடிபுலம் , வளர்தமிழ் புலம் , மொழிப் புலம் , அறிவியல் புலம் என்ற 5 புலன்களும் 25 துறைகளும் உள்ளன.
38.
1122 - சரசுவதி மஹால் நூலகம்
1869 - கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
1896 - கன்னிமாரா நூலகம்
1942 - உ. வே.சா நூலகம் (2128 ஓலை சுவடிகள் ,2941 தமிழ் நூல்கள்)
1973 - பூம்புகார் கடற்கரை சிற்பகூடம் (ஏழு நிலை மண்டபங்கள் , கண்ணகி வரலாற்றை விளக்கும் 49 சிற்ப தொகுதிகள் உள்ளன).
கலை கூடத்திற்கு அருகில் இலஞ்சி மன்றம் , பாவை மன்றம் , நெடுங்கல் மன்றம் உள்ளன.
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
1981 - மதுரை உலக தமிழ் மாநாடு
39.தமிழில் மொழி என்பதற்கு சொல் என்று பொருள்.
சொல் என்பதற்கு நெல் என்று பொருள்.
40. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி லி குருதி தேவைப்படுகிறது.
மனிதன் தன் வாழ்நாளில் 20 வருடங்கள் தூங்குகிறான்.3 லட்சம் கனவுகள் காண்கிறான்.
41.
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்தார்.
1931 ஆம் ஆண்டு காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை
கலந்து கொண்டார்.
1937 ஆம் ஆண்டு காந்தியடிகள் இலக்கிய மாநாடு தலைமை வகித்தார்.
42. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு பெண் யானைக்கு தந்தம் இல்லை.
ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் தந்தம் உண்டு.
யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு 65 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
43.தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சரணாலயமான முண்டந்துறை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை இருக்கும். கரையான் கரடிக்கு பிடித்த உணவு.
தமிழ்நாட்டில் வனகல்லூரி மேட்டுப்பாளையத்தில் உள்ளது.
44. சருகு மான், விளா மான் , வெளி மான் போன்ற மான் வகைகள் இந்தியாவில் உள்ளன.
45.இந்தியாவின் நயாகரா - அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி.
46.உலகத் தமிழ் மாநாடு
முதல் - கோலாலம்பூர் 1966
இரண்டாவது - சென்னை 1968
மூன்றாவது - பாரிஸ் 1970
நான்காவது - யாழ்பாணம் 1972
ஐந்தவாது - மதுரை 1981
ஆறாவது -கோலாலம்பூர் 1987
ஏழாவது - மொரிசியசு 1989
எட்டாவது - தஞ்சாவூர் 1995
செம்மொழி மாநாடு - கோவை 2010
47.
21 நரம்புகளை கொண்டது பேரி யாழ்.
17 நரம்புகளை கொண்டது மகர யாழ்.
16 நரம்புகளை கொண்டது சகோட யாழ்.
7 நரம்புகளை கொண்டது செங்கோட்டியயாழ்.
48.
அசோகரின் பேரானை 33
அவ்வையார் புறநானூறு 33 பாடல்கள்
அட்டையின் உடலில் 33 கண்டங்கள்
49.
இயற்கை இன்பகலம் - கலித்தொகை
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை பரிணாமம் - கம்ப இராமாயணம்
இயற்கை வழ்வில்லம் - திருக்குறள்
இயற்கை அன்பு - பெரியபுராணம்
இயற்கை தவம் - சீவக சிந்தாமணி
இயற்கை இறையருள் - தேவார , திருவாசக , திருவாய் மொழி
50.இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட
சீர்களும் தொட ர்ந்து வருவது’ அடி’ எனப்படும்.
அவை ஐந்து வகைப்படும்.
இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி;
மூன்று சீர்களைக் கொண்டது சிந்த டி ;
நான்கு சீர்களைக் கொண்டது அளவடி;
ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி; ஆறு
சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக்
கொண்டது கழிநெடி
51. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ள பெருமாள் திருமொழியில் 105 பாடல்களை இயற்றியுள்ளார்.
53. தமிழ் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - தொல்காப்பியம்.
தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - அப்பர் தேவாரம்.
தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது - சிலப்பதிகாரம்.
54. கம்பராமாயணம் 6 காண்டங்கள் , 113 படலங்கள் , 10569 பாடல்கள்.
தேம்பாவணி மூன்று காண்டங்கள் 36 படலங்கள் , 3615 பாடல்கள்.
இராவண காவியம் 5 காண்டங்கள் 3100 பாடல்கள்.
திருவருட்பா 6 திருமுறைகள் 5818 பாடல்கள்
சீறாப்புராணம் 3 காண்டங்கள் 5027 பாடல்கள்.
55.DCM DATA PRODUCTS என்ற கம்பெனி திருவள்ளுவர் என்ற தமிழ் கணினி 1983 ஆம் ஆண்டு உருவாக்கியது.
56.கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 மு்தல 18 அடியாகவும் இருக்கி்றது.
57.
1812 திருக்குறள் ஞான பிரகாசம் பதுப்பித்தார்
1915 குறுந்தொகை சவுரி பெருமாள் அய்யங்கார் பதுப்பித்தார்
1930 தமிழ் விடு தூது உ. வே. சா பதுப்பித்தார்
58. வெட்சி 12 துறை
கரந்தை 14 துறை
பாடாண் 10 துறை
59. சாகித்திய அகாதெமி விருது.
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - மா. பொ. சிவஞானம்.
1968 வெள்ளைபறவை - சீனிவாச ராகவன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1978 புது கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிகண்ணன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1982 மணிக்கொடி காலம் - பி. எஸ்.ராமையா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
1999 ஆலாபனை - அப்துல் ரகுமான் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி. பால சுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2003 கள்ளிகாட்டு இதிகாசம் கவிஞர் வைரமுத்து சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2004 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2006 ஆகாயதுக்கு அடுத்த வீடு - மு.மேத்தா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2008 மின்சாரப் பூ - மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2009 கையொப்பம் - புவியரசு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2010 - சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2016 ஒரு சிறு இசை - வண்ணதாசன்
சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
2017 காந்தள் நாட்கள் - இன்குலாப் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.
60. ஈரறிவு - சிப்பி , நத்தை
மூவறிவு - கரையான் , எறும்பு
நான்கறிவு - நண்டு , தும்பி
ஐந்தறிவு - விலங்கு , பறவை
Comments
Post a Comment