*கூற்றுகள் முழக்கங்கள்_Tnpsc*
*கூற்றுகள் முழக்கங்கள்*
மரப் பிசின் கொண்டு - பரிபாடல்.
பனை மரத்திலிருந்து விழுந்து பிழைதவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி இறந்தவனும் உண்டு - தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
இணையத்தில் இல்லை என்றால் உலகத்தில் அது நடைபெறவில்லை.
மனிதனுக்கு செய்யும் தொண்டு - ராமகிருஷ்ணர்.
"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்"
- சிலம்பு 2: 24
குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம் 
– ஔவை குறள், 
படுதிரை வையம் பாத்திய பண்பே –
(தொல்காப்பியம்)
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்
- புறம். 134 ( அடி 1 - 2 ).
இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீது இல் யா க ் கையொ டு ம ாய்த ல்
தவத்தலையே
(புறம். 214, 11-13).
”இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே ”.
- புறம் 34 (அடி 21-23)
“நான் மனிதன்; மனிதனை ச் சார்ந்த
எதுவும் எனக்குப் புறமன்று” - புலவர் தெறென்ஸ் 
(Terence).
“பூட்கையி ல்லோன் யாக்கை
போல” (புறம். 69) என்னும் அடியில் புலவர் 
ஆலத்தூர்கிழார் நிலைநாட்டுகிறார்.
கூம்பொடு மீப்பாய் களையாது - புறநானூறு.
தண்டுக்கை தாளந்தக்கை சார நடம் பயில்வார் - சம்பந்தர் தேவாரம்.
குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் 
மழலை சொல் கேளா தவர். - திருக்குறள்.
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்
பங்கய கண்ணனை பாடேலோர்  எம்பாவாய். - திருப்பாவை.
சங்கொடு தாரை காளம் தழங்கோலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி. - பெரியபுராணம் .
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ் - நாச்சியார் திருமொழி.
கலை உண கிழிந்த முழவுமருள் பெரும் பழம். - புறநானூறு.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி.  - புறநானூறு.
நல்லி யாழ் மறுப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் - புறநானூறு.
`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர்-அண்ணல் அம்பேத்கர்.
"இணையத்தில் இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவில்லை" என்பது லீயின் (1990 இல் டிம் பெர்னர்ஸ் லீ WWW வை கண்டறிந்தார்)  புகழ்பெற்ற வாசகம்.
நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது . அங்கு சாக்லேட் இங்கே பணம். *ஜான் ஷெப்பர்ட் பாரன்*
ஏடன்று கல்வி ; சிலர் பேசும் இயலன்று கல்வி ; பலர் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில். *-குலோத்துங்கன்*
கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அது மெய்ம்மையை தேடவும் அறநெறியை பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும். - *விஜயலட்சுமி பண்டிட் ( ஐ. நா.அவையின் முதல் பெண் தலைவர்)*
ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும் . ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை. - வாக்கர்.
என் பகுத்தறிவு பிரசாரத்திற்கு சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் , தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் .
- தந்தை பெரியார்.
தமிழக அரசியல் வானில் கவ்வி இருந்த கார் இருளை அகற்ற வந்த ஒளிகதிராக காயிதே மில்லத் முகமது  இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்கள் என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்  என்றார் தந்தை பெரியார்.(1938)
சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்?
விவேகானந்தர்.
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர்.
பொன்முடியார்.
அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்.
ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்` எனப் போற்றப்படுபவர்.
இராமானுஜர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்` என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்.
*தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் திருமந்திரம்.*
ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?.
வஞ்சி நெடும் பாட்டு *பட்டினப்பாலை* (கடியலூர் உருத்திரங் கண்ணனார்), மதுரைக்காஞ்சி(மாங்குடி மருதனார்).
*மணிமேகலை குறிப்புகள்*
சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல். *மணிமேகலை*
சீர்திருத்த காப்பியம்.
*மணிமேகலை*
கலம் செய் கம்மியர் வருமென கூ உய் *மணிமேகலை*
பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்.
ஆறுமுக நாவலர்.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.
சூரியநாராயண சாஸ்திரியார் என்ற இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர்.
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப் பொதுவுடைமையை விரும்பியவர்.
பாவேந்தர் பாரதிதாசன்.
1806 இல் நடைபெற்ற வேலூர் கழகம் 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் munnidu- வீ.டி. சவார்கர்.
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை - பாவேந்தர் பாரதிதாசன்.
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே- பொன்முடியார்.
சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்- விவேகானந்தர்.
முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்றுறை - நற்றிணை
கொற்கை பெருந்துறை முத்து - அகநானூறு.
திங்கள் நாள் விழா மலகு திருநெல்
வேலி யுரை செல்வர் தாமே. - திருஞான சம்பந்தர்.
பொதியி லாயினும் இமய மாயினும் 
பதியெழு அறியா பழங்குடி.
இளங்கோவடிகள் -சிலப்பதிகாரம் .
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி (வேணுவனம் - பழைய பெயர்) - திருஞான சம்பந்தர்.
தன்பொருணை புனல் நாடு - சேக்கிழார்.
தன்பொருனை - தாமிரபரணி
ஆண் பொருனை - அமராவதி.
புனையா ஓவியம் கடுப்ப புனைவில் - நெடுநல்வாடை (நக்கீரர்).
புனையா ஓவியம் புறம் போந்தன்ன - மணிமேகலை.
கலம் செய் கம்மியர் - மணிமேகலை.
இன்ன பல பல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் - பரிபாடல் (70).
சிதம்பரனார் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும்.புரட்சி ஓங்கும். நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.- சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.
ஒரு சிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்து விடாது .ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெற செய்வதே சுயராஜ்யம் ஆகும் - காந்தியடிகள்.
"இன்குலாப் ஜிந்தாபாத்" "பாட்டாளி வர்க்கம் வாழ்க" என்று முழங்கியவர் - பகத்சிங்.
1919 இல் நடைபெற்ற கிலாபத் இயக்க மாநாட்டில் வந்தே மாதரம் , அல்லாஹு அக்பர் , இந்து முஸ்லீம் வாழ்க என்று முழங்கியவர் - சௌகத் அலி.
பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் - தந்தை பெரியார்.
சட்டம் ஓர் இருட்டறை வழக்கறிஞரின் வாதம் அதில் விளக்கு - அறிஞர் அண்ணா.
இராவண காவியம் ( 5 காண்டன்கள் , 3100 பாடல்கள் ) காலத்தின் விளைவு , ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் - அறிஞர் அண்ணா.
சிவ பெருமானை உள்ளங்கவர் கள்வன் என்று கூறுபவர்- சம்பந்தர்.
இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம்.
இன்குலாப் ஜிந்தாபாத் , பாட்டாளி வர்க்கம் வாழ்க - பகத்சிங்.
1919 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டில் அல்லாஹு அக்பர் , வந்தே மாதரம் , இந்து முஸ்லீம் வாழ்க என்று முன்மொழிந்தவர் - *சவுஹத் அலி*
டெல்லி சலோ என்று முழங்கியவர் - *நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்*
இரத்தத்தை தாருங்கள் சுதந்திரத்தை நான் தருகிறேன். *நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்*
உ. வே. சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்து, “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார். இந்நிகழ்வுகளே காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.
காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் *தந்தை பெரியார்.*
*தந்தை பெரியார்.* முத்துராமலிங்க தேவரை *சுத்த தியாகி* என்று அழைத்தார்.
*தமிழ் தென்றல்* திரு.வி. க. ---> இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை 
*தமிழ் தென்றல்* திரு.வி. க. ---> இயற்கை தவம் - சீவக சிந்தாமணி.
 "தமிழ் தென்றல் " திரு வி கா . முத்துராமலிங்க தேவரை "தேசியம் காத்த செம்மல் " என்று அழைத்தார்.
*முத்தமிழ் காவலர்* கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை 
*அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார். - H.G.வெல்ஸ் - வரலாற்று அறிஞர்*
நகரங்களில் சிறந்தது காஞ்சி - "சாகுந்தலம்" எழுதிய காளிதாசர்.
கல்வி கரையில்லாத காஞ்சி - திருநாவுக்கரசர்.
காஞ்சி புத்தகயா, சாஞ்சி உள்ளிட்ட ஏழு புனித தலங்களுள் ஒன்று - யுவான்ஸ்வாங்.
வரலாற்று அறிஞர் *வில் டூரண்ட்* பொ.ஆ. மு ஆறாம் நூற்றாண்டை *நட்சத்திரங்களின் மழை* என்று வருணிக்கிறார்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் - திலகர்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - "காந்திய கவிஞர்" நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திரமும் இன்றி வஞ்சனை சொல்வரடி -  "மகாகவி" பாரதியார்.
குழந்தைகள் வரைந்தது பறவைகள் மட்டுமே வானம் தானாக உருவானது - கலா பிரியா.
வளங்கள் மனிதர்களின் சுய நலத்திற்கு அல்ல - மகாத்மா காந்தி.
இந்தியா மொழிகளின் அருங்காட்சியகம் - ச.அகத்தியலிங்கம்
இந்தியா இடங்களின்  அருங்காட்சியகம் - ஸ்மித் ----> சமுத்திரக் குப்தரை இந்திய நெப்பொலியன் என்று கூறினார்.
சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணம் வீச வேண்டும் - க. சச்சிதானந்தன்.
நிலம் கடவுளுக்கு சொந்தமானது - டு டு மியான் (ஷாஜி சரய துல்லா மகன்)
வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் -  *"மகாகவி" பாரதியார்* .
என்று பிறந்தாள் என்று அறிய முடியாத இயல்பினாள் எங்கள் தமிழ் தாய் என்று கூறியவர் - *"மகாகவி" பாரதியார்* .
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - 
 *"மகாகவி" பாரதியார்* .
யாமறிந்த புலவர்களிலே வள்ளுவனை போல் கம்பனை போல் எங்கும் காணோம் - 
 *"மகாகவி" பாரதியார்* .
வானை அளப்போம் கடல் மீனை  அளப்போம்
 *"மகாகவி" பாரதியார்* .
Comments
Post a Comment