*27.தினம் 25 வினாக்கள்_TNPSC 02-12-22*
*27.தினம் 25 வினாக்கள்_TNPSC 02-12-22*
651.
ஃப்ரெஞ்ச் அரசிடம் செவாலியே விருது பெற்றவர் - தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன்.
652.அகநானூறு
களிற்றியானை நிரை:120
மணிமிடை பவளம் :180
நித்திலக்கோவை : 100
653. ஐந்து முகங்களை உடைய முரசு குட முழா ஓசை பஞ்சமகா சப்தம் எனப்படுகிறது.
654.
கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு .
மாக்கண் முரசம் என மதுரைக்காஞ்சி கூறுகிறது.
655.782 அடிகள் உடைய மதுரைக்காஞ்சி ஆசிரியர் மாங்குடி மருதனார்.
பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் அரசன்.
656.ஆனைமலை பரம்பிக்குளம் பகுதிகளில் வாழ்ந்த காடர்கள் பேசிய மொழி ஆல் அலப்பு.
657.சாகித்திய அகாதமி விருது
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - மா. பொ. சிவஞானம்.
1968 வெள்ளைபறவை - சீனிவாச ராகவன் பெற்றுள்ளார்.
1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி
658.தமிழ் நாட்டின் ஹாலந்து திண்டுக்கல் மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
659.இரும்பு மற்றும் மாங்கனிகள் நகரம்.
ஜவ்வரிசி அதிகம் உற்பத்தி சேலம்.
660. குட்டி ஜப்பான் - சிவகாசி
தமிழ் நாட்டின் ஹாலந்து -திண்டுக்கல்.
மாங்கனி நகரம் - சேலம்.
பின்னலாடை நகரம் - திருப்பூர்.
661.முதலாம் குலோத்துங்கன் சோழன் அவைக்கள புலவரான (கலிங்கத்துப்பரணி) ஜெயங்கொண்டார் தீபங்குடி ஊரை சேர்ந்தவர்.
662.களிறு - ஆண் யானை.
கரி - யானை.
பிடி - பெண் யானை.
வேழம் - யானை.
663.கருப்பு காந்தி - காமராஜர்.
தென்னாட்டு காந்தி - அறிஞர் அண்ணா.
எல்லை காந்தி - கான் அப்துல் கபார் கான்
664. ஒ கே எஸ் ஆர் குமாரசாமி முதலியார் திருப்பூர் குமரன் ஆவார்.
665.தமிழின் முதல் உரையான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு 1812.
ஜி யூ. போப் 40 ஆண்டுகள் படித்து சுவைத்த போப் 1886 ஆம் ஆண்டு மொழி பெயர்த்து வெளியிட்டார்.
666.
1954 ஆம் ஆண்டு காமராஜர் முதல்வரானார்.
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
667.குமரி மாவட்டத்தின் பழைய பெயர் நாஞ்சில் நாடு.
668.சங்கொடு தாரை காளம் தழங்கோலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி. - பெரியபுராணம் .
669.மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ் - நாச்சியார் திருமொழி.
670.“கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கல்வி குறித்து ஐ நாவின் முதல் பெண் தூதுவர் விஜயலட்சுமி பண்டிட் கூறுகிறார்.
671.இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ?-
தமிழ்த் தென்றல் திரு. வி. க.
672.உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.இராமகிருஷ்ணன்
பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனை முத்து
673.வாணிதாசனின் இயற்பெயர் – அரங்கசாமி என்ற எத்திராசலு
வாணிதாசன் யாருடைய மாணவர் – பாரதிதாசன்
வாணிதாசன் அவர்களுக்கு தெரிந்த மொழிகள் – தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
674.இயற்பெயர்:
சுஜாதா - ரங்கராஜன்.
சுரதா - இராஜ கோபாலன் .
தாரா பாரதி - ராதாகிருஷ்ணன்.
675.
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு.
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்.
இயற்கை தவம் - சீவக சிந்தாமணி.
இயற்கை அன்பு - பெரியபுராணம்.
Comments
Post a Comment